தாறுமாறாய் ஏறிய விஜய் டிவி TRP ரேட்டிங்! முக்கிய சேனலை பின்னுக்கு தள்ளியது!

தாறுமாறாய் ஏறிய விஜய் டிவி TRP ரேட்டிங்! முக்கிய சேனலை பின்னுக்கு தள்ளியது!


Vijay tv TRP rating after bigg boss show

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்றுபேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 13 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக செல்வதால் விஜய் தொலைக்காட்சியின் TRP தாறுமாறாக ஏறியுள்ளது. TRP யை பொறுத்தவரை சன் தொலைக்காட்சி எப்போதும் முதல் இடத்திலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டாவது இடத்திலும் இருப்பதுதான் வழக்கம்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளி TRP இல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சி அதே முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

bigg boss tamil