அந்த மனசு தான் சார் கடவுள்.. துப்புரவு பணியாளர்களுக்கு உடை வாங்கி பரிசளித்த விஜய் டிவி பிரபலம்..! யாரென்று தெரியுமா?..! நீங்களே பாருங்க..!!

அந்த மனசு தான் சார் கடவுள்.. துப்புரவு பணியாளர்களுக்கு உடை வாங்கி பரிசளித்த விஜய் டிவி பிரபலம்..! யாரென்று தெரியுமா?..! நீங்களே பாருங்க..!!


vijay tv serial actress pavithra purchase dress for sanitary workers

தமிழில் சின்னத்திரை ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் முதல் நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் ரசிகர்கள் மனதை கவரும் விதத்தில் அமைந்திருக்கும். "ஈரமான ரோஜாவே" என்ற தொடரின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பவித்ரா. இவர் தற்போது "தென்றல் வந்து என்னை தொடும்" என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் எப்பொழுதும் யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்டேட் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் ஓணம் ஸ்பெஷல்காக ஷாப்பிங் செய்துள்ளார். தனது குடும்பத்தாருக்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், குழந்தை விளையாட்டு சாமான்கள் அனைத்தையும் வாங்கி குவித்தார். 

actress pavithra

அதோடு நிறுத்தாமல் துப்புரவு பணியாளர்களுக்காகவும் ஆடையை வாங்கி சென்று, அவர்களை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்திலும் சரி, தற்போதும் சரி நமக்கு பெரும் உதவியாக இருந்து வருவது துப்புரவு பணியாளர்கள். இப்படி ஒரு விஷயத்தை செய்வது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பவித்ரா தெரிவித்துள்ளார். இது குறித்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகிள்ளது. இதனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.