
விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தாமரையாக நடித்த நடிகை ராஷ்மிக்கு திருமணம் முடிந்துவிட்டது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மிர்ச்சி செந்தில் டபுள் ஆக்ஷனில் நடிக்க, அவர்களில் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்த செந்திலுக்கு ஜோடியாக தாமரையாக நடித்தவர் ராஷ்மி ஜெயராஜ்.
கொரோனாவால் சில காலங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த தொடர் படப்பிடிப்பிறகு அனுமதி கிடைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து ஹீரோயின்கள் வரமுடியாத நிலையில் பாதியிலேயே முடிவுக்கு வந்தது.அதனைத் தொடர்ந்து அந்த தொடர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 என புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் செந்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக சரவணன் மீனாட்சி ரக்ஷிதா நடித்து வருகிறார்.இந்தநிலையில் ராஷ்மி ஜெயராஜுக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது அத்தகைய அழகிய ஜோடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement