பயங்கர மாடர்னாக மாறிய விஜய் டிவி ராஜலக்ஷ்மி! புகைப்படம் இதோ!Vijay tv rajalakshmi in modern dress

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி. கணவன் மனைவியான இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்கள். போட்டியின் கடைசி வரை சென்ற செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் படத்தை கைப்பற்றினார்.

senthil ganesh

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியியல் வெற்றிபெற்றதற்காக இவர்களுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு படங்களில் இருவரும் ஜோடியாக பாடி வருகின்றனர். சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இதுவரை வந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் சேலையுடன் தோற்றமளித்த ராஜலக்ஷ்மி தற்போது பயங்கர மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். அந்த நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.

senthil ganesh