சாப்பிட கூட முடியாமல் துன்பப்படும் விஜய் டி.வி பவித்ரா.. ரசிகர்களிடம் உண்மையை கூறி கண்ணீருடன் நெகிழ்ச்சி கோரிக்கை..!

சாப்பிட கூட முடியாமல் துன்பப்படும் விஜய் டி.வி பவித்ரா.. ரசிகர்களிடம் உண்மையை கூறி கண்ணீருடன் நெகிழ்ச்சி கோரிக்கை..!


vijay-tv-pavithra

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதில் உமா ரியாஸ்கான், நடிகை வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்ததால், முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் கடந்த நவம்பர் 14ஆம் தேதி துவங்கியது. இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, நடிகை ஷகிலா, மதுரை முத்து, அஸ்வின், பவித்ரா லட்சுமி, தீபா மற்றும் கனி ஆகியோர் குக்காக பங்கேற்றனர். 

இதில் கோமாளிகளாக மணிமேகலை, சிவாங்கி, புகழ், டிக்டாக் சரத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். மேலும் இதில் மாடல் அழகியான பவித்ரா லட்சுமி கலந்து கொண்ட நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பின் அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 

vijay tv

அவர் ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமான நிலையில், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். இதற்கு காரணம் தெறி படத்தில் சமந்தா இருக்கும் புகைப்படத்தை போல தனது சமூக வலைத்தளத்தில் இவர் போட்டோ வெளியிட்டது தான். 

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அதை வைத்து பலரும் பல விதமான மீம்ஸ்களை ஷேர் செய்தனர். ஆனால் தன்னை பற்றி வந்த நெகட்டிவ மீம்களை கண்டு கோபப்படாமல் ஜாலியாக எடுத்துக் கொண்டார் பவித்ரா. இவர் ஒரு சில படங்களில் கமிட்டாகிய நிலையில், இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. 

இந்நிலையில், சமீபத்தில் உடல் எடையை குறித்து சிலிம்மாக மாறி இருக்கிறார் பவித்ரா. இப்படி இருப்பதை கண்ட ரசிகர் ஒருவர், "நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள்" என்று கமெண்ட் செய்ததால், "என்னுடைய உடல் எடை எதனால் இவ்வளவு குறைந்தது? என்று பல கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது. 

vijay tv

ஆம். நான் அதிக எடையை இழந்துவிட்டேன். அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை. வேலைப்பளு காரணமாகவும், எனக்கு இருக்கும் சில தனிப்பட்ட வேலைகளின் காரணமாகவும் என்னால் சரியாக தூங்க இயலவில்லை. சரியான நேரத்தில் சாப்பிட கூட முடியவில்லை. 

சூட்டிங் காரணமாக அதிக பயணம் செய்வதால் உடற்பயிற்சிகளையும் செய்ய இயலவில்லை. இது கண்டிப்பாக ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்று எனக்கு நன்றாக தெரியும். விரைவில் நான் நல்ல உடல் மற்றும் மனபலத்துடன் வருவேன் என நம்புகிறேன். 

உடல் எடையை குறைப்பது எப்படி? என்று கேட்கும் பலருக்கும் நான் சொல்ல விரும்புவது, என்னை மட்டும் பின்பற்றாதீர்கள். தயவு செய்து ஒழுங்காக சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்குங்கள். சரியான நேரத்தில் வேலை செய்யுங்கள் என்று தான் கூறுவேன்" என கூறியுள்ளார்.