ஜோடியாக ஊர் சுற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - ஐஸு...! காதலா? நட்பா?..!Vijay TV Pandian Stores VJ Deepika and Kannan Instagram Post about Coimbatore Esha Visit

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி மகனாக நடித்தவர் சரவணன் விக்ரம் என்ற கண்ணன். 

அதே தொடரில், நடித்த நடிகை ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தொடரில் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்வதை போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஐஸ்வர்யாவுக்கு முகத்தில் ஏற்பட்ட பருக்கள் பிரச்சனை காரணமாக, தொடரில் இருந்து தன்னை விலகிக்கொண்டார். 

cinema

மேலும், யூடியூபில் குறும்படம் நடித்தும் வெளியிட்ட நிலையில், முகப்பருக்கள் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு விடுமுறை நாட்களை இன்பமாக கழித்து வந்தார். ஐஸ்வர்யாவும் - விக்ரமும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், பலரும் அவர்களை காதல் ஜோடிகள் எனவும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய ஐஸ்வர்யா சரவணனுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி, அவ்வப்போது அவருடன் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கோவையில் உள்ள ஈஷாவுக்கு ஐஸ்வர்யா - விக்ரம் ஆகியோர் சென்றுள்ள புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

cinema

இவரது இன்ஸ்டா பதிவில் ஒருவர் காதல் ஜோடிகள் ஊர் சுற்றுகிறார்கள் என்பதை போல கருத்து பதிவிட, அதனைக்கண்டு ஆத்திரமுற்ற ரசிகர்கள் ஆண் - பெண் ஜோடியாக சென்றாலே காதல் தானா? அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கருத்திட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் உண்மையான பெயர் தீபிகா என்பதும், அவர் வி.ஜெவாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.