விஜய் டீவி பிரபலத்திற்கு இந்த நிலைமையா?? அவரே கூறிய பதில்!!

விஜய் டீவி பிரபலத்திற்கு இந்த நிலைமையா?? அவரே கூறிய பதில்!!


vijay-tv-jacklin


விஜய் டீவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியலில் நடித்து பின்னர் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி ஜாக்குலின். 

இவர் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷனுடனான இவரது காம்பினேஷன் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்திருந்தார் ஜாக்குலின்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக ஜாக்குலின் பணியாற்றினர். இவரது குரல் தனி அடையாளமாக மாறியது. இந்தநிலையில் ரக்‌ஷனும், ஜாக்குலினும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. அதனையடுத்து அவர் நண்பர் தான் என்று கூறி ஜாக்குலின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

vijay tv jacklin
இந்நிலையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் சைனஸ் பிரச்சனை காரணமாக தற்போது ஜாக்குலின் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சியிலும் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜாக்குலின் கூறுகையில், ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு குரல் வளம் மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதுவே சரி இல்லை என்றால் என்ன செய்வது. அதனால்தான் சிகிச்சை எடுத்துட்டு கொண்டிருக்கிறேன் என கூறினார்.