விஜய் டீவியை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்! சோகத்தில் ரசிகர்கள்!

விஜய் டீவியை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்! சோகத்தில் ரசிகர்கள்!


Vijay tv fame shivani left from vijay tv serial

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது. சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஒன்றுதான் கடைக்குட்டி சிங்கம். இதற்கு முன்னர் பகல்நிலவு என்ற தொடரில் ஜோடியாக நடித்த அசிம் மற்றும் ஷிவானி கடைக்குட்டி சிங்கம் தொடரில் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.

vijay tv

பகல்நிலவு தொடர் முடிவு பெறுவதற்கு முன்பே இந்த ஜோடி கடைக்குட்டி சிங்கம் தொடர்மூலம் மீண்டும் இணைந்தது. தொடர் தொடங்கி இன்னும் ஒரு மாதகாலம் கூட ஆகாத நிலையில் கதையின் நாயகி ஷிவானி தொடரைவிட்டு வெளியேறியுள்ளார்.

அவரா வெளியேறினாரா அல்லது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாரா என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை. நடிகை சிவாணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் இந்த தொடரை விட்டு வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.