விஜய் டிவி பாலாவுக்கு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?Vijay TV bala get married soon

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் விஜய் டிவி பாலா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர ஊர்தி சேவையை தொடங்கி வைத்து பலரின் கவனத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து, சென்னை பெரு வெள்ளத்தின் போது தன்னிடம் இருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் என பிரித்து கொடுத்தார். 

vijay tv

இந்தநிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பாலா, புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், குழந்தைகளுக்கு குட் டச்- பேட் டச் என்று சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு, டோன்ட் டச் என்று சொல்லிக் கொடுங்கள். அதுதான் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழியாகும் என கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். என்றாலும் தனது காதலி யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து பாலா திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் என்பது குறித்து தீவிர யோசனையில் ஈடுபட்டுள்ளனர்.