பாக்கியலட்சுமிக்கு கோபி வைத்த மாஸ் ட்விஸ்ட்.. ஆடிப்போன பாக்யா.. இன்றைய எபிசோடில் நடந்தது என்ன தெரியமா?.!

பாக்கியலட்சுமிக்கு கோபி வைத்த மாஸ் ட்விஸ்ட்.. ஆடிப்போன பாக்யா.. இன்றைய எபிசோடில் நடந்தது என்ன தெரியமா?.!


vijay-tv-baakyalatsumi-serial-today-episode

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, கடந்த சில வாரமாக மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபியின் திருமணத்தை மீறிய உறவால் பாக்கியலட்சுமி விவாகரத்து தந்துவிட, அவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் கோபி ஈடுபட்டு வருகிறார். 

இந்த தொடர் குடும்ப கதையை பின்னணியாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், பலரும் இத்தொடருக்கு அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், இன்று பாக்கியலட்சுமி சீரியலில் மாஸ் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பாக்கியலட்சுமி பெட்டியுடன் வீட்டின் கீழ் பகுதிக்கு வந்தபோது, அவரே வீட்டை விட்டு வெளியேறி செல்வதாக கோபி நினைத்திருந்தார். 

vijay tv

ஆனால், பெட்டியை தூக்கி வாசலில் எரிந்தபோது அவரின் ஆடைகள் இருக்க, நான் வெளியே சொல்லவேண்டுமா? என கோபி கேட்கிறார். அதற்கு பதிலளித்த பாக்யா தன் தரப்பு நியாயத்தை கூறி, நான் உன்னுடன் ஒரே அறையில் இனி இருக்க மாட்டேன் என்று கூறுகிறார். அதனைத்தொடர்ந்து, ஒரு மிகப்பெரிய சூழ்ச்சியில் பாக்யாவை கோபி சிக்க வைக்கிறார். அது என்ன சூழ்ச்சி என்ற சஸ்பென்ஸுடன் இன்றைய எபிசோட் நிறைவு பெறுகிறது. 

vijay tv

இத்தனை நாட்களாக பாக்யலட்சுமி பேசுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இன்று அவர் சில நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தாலும் கோபியின் செக்மேடால் வாயடைத்துப்போனார். இறுதியில் அவரின் செக்மேட் உடைக்கப்பட்டதா? பாக்யா என்ன பதில் கூறினார் என்பதை இன்று ஒளிபரப்பாகும் தொடரில் காணலாம்.