சினிமா

விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா இவளோ பெரிய படிப்பு படித்துள்ளாரா?

Summary:

Vijay tv aranthangi nisha education details

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரைப்போல விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் ஏராளம்.

அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பேரும், புகழும் பெற்றுள்ளார் அறந்தாங்கி நிஷா.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. கணவன், மனைவியாக இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவி அரங்கத்தையே சிரிப்பாள் அதிர வைத்துள்ளனர்.

இப்படி தன்னை தானே கலாய்த்துக் கொள்வதும், மற்றவர்களை காமெடி செய்வதுமாக இருக்கும் நிஷா என்ன படித்துள்ளார் தெரியுமா. அவர் MBA முடித்துள்ளாராம், இதனை தொகுப்பாளினி மணிமேகலை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.


Advertisement