இவர் பிக்பாஸ் வீட்டுக்கு போறது உண்மைனா அப்போ வீடே செம ஜாலியா இருக்கும்! யார் தெரியுமா அது?

இவர் பிக்பாஸ் வீட்டுக்கு போறது உண்மைனா அப்போ வீடே செம ஜாலியா இருக்கும்! யார் தெரியுமா அது?



Vijay tv arandhangi nisha in Bigg boss season tamil 4

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த 3 சீசன்களாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் பிக்பாஸ் சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

Bigg boss season 4

விரைவில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்க இருக்கும் நிலையில் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதேநேரம், இந்தமுறை யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் போக இருக்கிறார்கள் என்ற பெயர் பட்டியல் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைராலகிவருகிறது.

நடிகை சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், நடிகை ரேகா இவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளநிலையில் இந்த பட்டியலில் தற்போது விஜய் டிவி கலக்கபோவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷாவும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Bigg boss season 4

மிகவும் கலகலப்பாக பேசும் சுபாவம் கொண்ட அறந்தாங்கி நிஷா, இந்த போட்டியில் கலந்துகொண்டால் நிச்சயம் பிக்பாஸ் வீடே செம கலகலப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் உண்மையிலையே அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்கிறாரா இல்லையா என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.