ஒவ்வொரு விஜய் ரசிகனும் தெரிந்துகொள்ள வேண்டிய நாள் இது! இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?

ஒவ்வொரு விஜய் ரசிகனும் தெரிந்துகொள்ள வேண்டிய நாள் இது! இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?


Vijay thulaatha manamum thullum movie celebrating 20 years of block buster

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுவதும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

vijay

தற்போது இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள விஜய் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் இந்த வெற்றி ஒரே நாளிலோ அல்லது ஒரே படத்திலோ வந்தது இல்லை. பல்வேறு வெற்றிப்படங்கள், தோல்விப்படங்கள் என அனைத்தையும் தாண்டி இன்று தளபதியாக வீற்றிருக்கிறார் விஜய்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 29 ஜனவரி 1999 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி இதுவரை 20 ஆண்டுகள் ஆகிறது.

vijay

இந்த படம் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்க, சிம்ரன், மணிவண்ணன், வையாபுரி, தாமு, பொன்னம்பலம் ஆகியோர் நடித்திருந்தனர். RB சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.