சினிமா

தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா!!! பூரிப்பில் அர்ஜூன் ரெட்டி

Summary:

அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமாகிய தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா. 

இப்பொழுது தமிழ் நாட்டிலும் இவரது படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளிவந்துள்ள கீதா கோவிந்தம் படம் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.

தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பிரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 5 கோடி வசூல் ஈட்டி பாகுபலிக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இதற்காக விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement