தலைமைக்கு மமதை அதிகரித்து அதிகாரம் துஷ்பிரயோகமாகிவிடக்கூடாது  - பிக்பாஸ் அரசியலுக்கு கமல் தரமான பதில்.!

தலைமைக்கு மமதை அதிகரித்து அதிகாரம் துஷ்பிரயோகமாகிவிடக்கூடாது  - பிக்பாஸ் அரசியலுக்கு கமல் தரமான பதில்.!



vijay-television-bb7-tamil-5-nov-2023-promo


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 07, தற்போது 33 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்போட்டியில் கலந்துகொண்டவர்களில் அன்னபாரதி, வினுஷா, யுகேந்திரன், விஜய், அனன்யா ஆகியோர் மக்களின் வாக்கு கிடைக்காமல் வெளியேற்றப்பட்டனர். 

பாவா செல்லத்துரை மட்டும் சுயமாக விருப்பத்தின் பேரில் வெளியேறினார். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தும் நோக்கில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, தமிழ் பிக்பாஸில் முதல் முறையாக பிரதீப் ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில், நடப்பு வாரத்தில் நாமினேட் செய்யப்படுபவர்களில் எலிமினேஷன் ஞாயிற்றுக்கிழமையான இன்று உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் நடிகர் கமல் ஹாசன் இறுதியாக, "அதிகாரம் துஷ்ப்ரயோகமாகிவிடக்கூடாது என்ற கருது எந்த தலைமைக்கும் பொருந்தும். இரண்டு முறை தலைமை பொறுப்பு கிடைத்தால் மமதை அதிகரிக்கக்கூடாது" என தெரிவித்தார். இது அப்பட்டமான அரசியல் பேச்சு என்பதாக ஆண்டவரின் பின்தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.