பிரமாண்ட இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளாரா விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.vijay-son-sanjay-casting-in-sankar-movie

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சங்கர். இவரது படங்கள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கும் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். அதற்கு உதாரணம்தான் இவரது இயக்கத்தில் வெளியான 2 . ௦ திரைப்படம். 3D தொழில்நுட்பம், 4D சவுண்ட் என தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்றார் இயக்குனர் சங்கர்.

தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் சங்கர். இந்தியன் 2 விழும் நடிகர் கமலஹாசனே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் மகன் சஞ்சய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vijay

சஞ்சய் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். தற்போது குறும்படங்களை இயக்கி, அதில் நடித்தும் வருகிறார் சஞ்சய். தற்போது விஜய் மகன் சஞ்சய் சங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் தீயாய் பரவுகிறது.

சங்கர் தற்போது இந்தியன் 2 வில் பிஸியாக இருப்பதால் அடுத்த படத்திற்கான வேளைகளில் இறங்குவது சந்தேகம்தான், அதுமட்டும் இல்லாமல் சங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே பிரமாண்டமாக இருக்கும் என்பதால் சஞ்சயை அவர் தேர்வு செய்வாரா என்பதும் குழப்பமே. அதனால், இது வெறும் வதந்தியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்கர் தரப்போ அல்லது விஜய் தரப்போ இதுவரை எந்த ஒரு விளக்கமும் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.