தயவுசெய்து இப்படி செய்யாதீங்க..... அப்பாவுக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஜய் மகன்.!Vijay son request to fans

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தானா நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாரிசு’ படத்தின் புகைப்படம், வீடியோக்களை ரசிகர்கள் தயவு செய்து பகிரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.