சினிமா

கமல்ஹாசனின் செம மாஸான பாடலை விஜய் எப்படி பாடியுள்ளார் பார்த்தீங்களா!! இணையத்தையே கலக்கும் வீடியோ இதோ!!

Summary:

vijay singing kamal song

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள்  திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். 

மேலும் விஜய்க்கென  எக்கச்சக்கமான நற்பணி மன்றங்கள்,  மக்கள் மன்றம் என பல அமைப்புகள் உள்ளது.  அவற்றின் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர்.

vijay க்கான பட முடிவு

இந்நிலையில் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகும்,  விளையாட்டை மையமாக கொண்ட பிகில் திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

 மேலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் உலக நாயகன் கமல் திரைத்துறைக்கு வந்து 60ஆண்டுகள் நிறைவுறுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் பேட்டி ஒன்றில்  கமல்ஹாசன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகா பாடலை பாடியிருந்தார். அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதனை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். 


Advertisement