அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா!! சும்மா நச்சென விக்னேஷ் சிவன் கூறியுள்ளதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் விஜய் சேதுபதி. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து,அசத்தக்கூடிய இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இவருடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ஏகே 62 படத்தை இயக்க உள்ளாராம்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது. அண்மையில் இது குறித்து பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் கேட்டபோது அவர், நானும் இதே கேள்வியை விக்னேஷ் சிவனிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் என்னுடைய ஹீரோ. உங்களை வில்லனாக பார்க்க முடியாது என கூறினார் என்றுள்ளார். இதன் மூலம் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.