சினிமா

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர் வசனத்தை பேச விஜய் சேதுபதி எப்படி கஷ்டப்படுகிறார் பாருங்கள்! வீடியோ!

Summary:

Vijay sethupathi super deluxe dubbing video

மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலானது. சூப்பர் டீலக்ஸ் படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் வைரலானது. அதற்கு காரணம், அந்த ட்ரைலரில் விஜய் சேதுபதி ஒரு கதை சொல்வதுபோல அமைந்திருக்கும். மேலே புலி, கீழே பாதாளம், நடுவுல பாம்பு இப்படி வேகமாக கதை சொல்வார் விஜய் சேதுபதி.

தற்போது விஜய் சேதுபதி பேசிய அந்த வசனத்தின் டப்பிங் பொது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது. மிக கோர்வையாக, வேகமாக வரும் அந்த வசனத்தை பேச விஜய் சேதுபதி எவ்வளவு முயற்சி செய்கிறார், எவ்வளவு தடுமாறுகிறார், கடைசியில் எப்படி பேசி முடித்தார் என அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ. 


Advertisement