அடேங்கப்பா.. மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்வளவா??Vijay Sethupathi salary in master movie

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் இதில் மிரட்டலான வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். மாஸ்டர் படம் வெளியாகி உலகளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது.

vijay sethupathi

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ரூபாய் 10 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.