சினிமா

ஆத்தாடி! ஒரு வெப் தொடரில் நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா? அப்படியென்ன ரோலில் நடிக்கிறார் தெரியுமா??

Summary:

ஒரு வெப் தொடரில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு 55 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  குறுகிய காலத்திலேயே தீராத முயற்சியால் உச்சநிலைக்கு சென்ற விஜய் சேதுபதிக்கென தற்போது தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

அவரது கைவசம் தற்போது  கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்பிரமணியம், 19 (1) (a) என ஏராளமான படங்கள் உள்ளன. 

vijay sethupathiக்கான பட முடிவுகள்

தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக சன்னி என்கிற இந்தி வெப் தொடரில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில்  பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடிக்கிறார்.

இந்த வெப்ப தொடரில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 55 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர் ஷாகித் கபூருக்கு 40 கோடிதான் சம்பளம் எனவும் கூறப்படுகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.


Advertisement