விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ தகவல்; ரசிகர்கள் உற்சாகம்.!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ தகவல்; ரசிகர்கள் உற்சாகம்.!


vijay-sethupathi-new-flim-thuklak

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான துக்ளக் படத்தை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சாதாரண துணை நடிகராகா சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது.


சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதுமட்டும் இல்லாமல் 96 திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தின் 100 வது நாள் விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய விஜய் சேதுபதி தனது அடுத்த படமான துக்ளக் படத்தை பற்றிய தகவலை வெளியிட்டார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் என்பவர் இயக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். 

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். ஒரே சமயத்தில் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘சிந்துபாத் ‘மாமனிதன், ‘சூப்பர் டிலக்ஸ், ‘சயிரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.