சூப்பர்.. பிசாசு இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா! அட.. யார்னு பார்த்தீங்களா!

சூப்பர்.. பிசாசு இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா! அட.. யார்னு பார்த்தீங்களா!


Vijay sethupathi going to act in miskin next movie

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் நரேன் நடிப்பில் வெளிவந்த அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் என பல படங்களை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க தயாரானார்.

ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தனது இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

vijay sethupathi

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியாவதற்கு தயாராக உள்ளது. பிசாசு 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். இந்நிலையில் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது