சினிமா

ஷில்பா வேடத்தில் டூயட் ஆடும் விஜய் சேதுபதி! வைரல் வீடியோ

Summary:

Vijay sethupathi duet in tik tok

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் பகத் பாசில், மிஸ்கின் சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

விஜய் சேதுபதி இந்த முயற்சி அவரால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை சினிமா உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. ஏற்கனவே பல தோற்றங்களில் வெற்றி படங்களை கொடுத்துள்ள விஜய் சேதுபதியின் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் பெண் வேடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி ஒருவருடன் டிக்-டாக் ஆப்பில் டூயட் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 


Advertisement