விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் மகாராஜா; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விபரம் இதோ.!



Vijay Sethupathi 50th Movie announcement 

 

தமிழ் திரையுலகில் மிகவும் கஷ்டங்களை தாங்கி, இன்றளவில் மக்கள் செல்வனாக வலம்வருபவர் விஜய் சேதுபதி. 

இவரின் நடிப்பில் வெளியான படங்களில் அடுத்தடுத்த வரவேற்பு, வெற்றியை தொடர்ந்து தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வருகிறார். 

இந்நிலையில், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

vijay sethupathi

நிதின் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் அவரின் 50வது படமாக உருவாகும் திரைப்படத்திற்கு மகாராஜா என பெயரிடப்பட்டுள்ளது. 

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மகாராஜா திரைப்படத்தில் நட்டி நாகராஜ் உட்பட பலரும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படம் அரசியல் கதைக்களத்துடன் இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.