விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய படத்தில் நடிகர் பரத்; எந்த படம் தெரியுமா?

விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய படத்தில் நடிகர் பரத்; எந்த படம் தெரியுமா?


vijay sethupathi- simpa - actor bharath

விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய சிம்பா படத்தில் நடிகர் பரத் நடித்துள்ளார் என்று இப்படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்து விட்டார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. தற்போது இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

vijaysethupathi

இந்நிலையில், சிம்பா படத்தில் விஜய்சேதுபதி நடிக்காதது குறித்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் கூறுகையில்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே விஜய் சேதுபதிக்காக சிம்பா படத்தின் கதையை உருவாக்கினேன். ஆனால், அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறி இப்படத்தில், நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து பிரசன்னாவிடம் கூற அவரும் மறுத்துவிட்டார். இறுதியில் ஜிவி பிரகாஷூம் மறுப்பு தெரிவிக்க நடிகர் பரத் மட்டும் தைரியமாக ஒப்புக்கொண்டார். 

ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்று அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. தொடர்ந்து பரத்துக்காக இப்படத்தின் கதையை கொஞ்சம் மாற்றினேன். இப்படத்தின் உண்மையான எடிட்டர் ராஜ்குமார் தான் எல்லா வேலைகளையும் செய்தார். ஆனால், ஒப்பந்தம் அடிப்படையில் அச்சு ராஜாமணியின் பெயர் படத்தின் டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இப்படத்தில் பரத் உடன் பானு ஸ்ரீ மெஹ்ரா, ரமணா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.