சினிமா

விஜய் அந்த இயக்குனர் படத்தில் நடிக்கவில்லையாம்..! தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி..!

Summary:

Vijay not in raja mouli rrr movie

நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கிவரும் RRR படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது வெறும் வதந்தி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த மாதம் தொடக்கத்தில் வெளியாக இருந்த இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கிவரும் RRR என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்த தகவல் உண்மை இல்லை. வதந்தி என தற்போது உறுதியாகியுள்ளது. ரத்தம் ரணம் ரவுத்திரம் (RRR) என்ற வரலாற்று பின்னணியை கொண்டு, சுமார் 350 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகிவருகிறது. பாகுபலி திரைப்படம் போலவே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் என இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement