புதிய பிசினஸில் கால்பதிக்கிறாரா தளபதி விஜய்.! அதுவும் யாருடன் கூட்டணி போடுகிறார் பார்த்தீங்களா!!

புதிய பிசினஸில் கால்பதிக்கிறாரா தளபதி விஜய்.! அதுவும் யாருடன் கூட்டணி போடுகிறார் பார்த்தீங்களா!!


vijay new business with reliance company

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஜய்யின் 66 வது படமான இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகஉள்ளது. இப்படம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எமோஷனல் செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது.

வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சினிமா துறையையே கலக்கி வரும் நடிகர் விஜய் சில தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

vijay

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விஜய்க்கு சொந்தமாக பல மண்டபங்கள் உள்ளன. அதில் சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை 8 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளாராம். இந்நிலையில் தற்போது விஜய் திருமண மண்டபங்களை இந்தியாவிலேயே பிரபல தொழிலதிபரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டாக மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.