பிரபல விஜய் பட நடிகைக்கு திருமணம்.. வைரலான திருமண புகைப்படங்கள்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?..!!

பிரபல விஜய் பட நடிகைக்கு திருமணம்.. வைரலான திருமண புகைப்படங்கள்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?..!!


vijay-movie-actress-marriage

 

கடந்த 2019-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, அமிர்த அய்யர், காயத்ரி ரெட்டி, வர்ஷா பொல்லம்மா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை அட்லி இயக்கியிருந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டது. பிகில் படத்தில் மாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி. 26 வயதாகும் இவர், தனது 20 வயதிலேயே மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் சீசன் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

vijay movie

இந்த நிலையில், காயத்ரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்திருக்கிறது.

அத்துடன் காயத்ரி ரெட்டியின் கணவர் வெளிநாட்டில் கன்ஸ்ட்ரக்சன் தொழில் செய்பவர் என்பதால் திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டிலாக இருப்பதாக காயத்ரி ரெட்டி கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.