"தளபதி 68 பட நாயகி மீனாட்சி சவுத்ரியின் வேற லெவல் போட்டோஷூட்!"Vijay movie actress glamour photoshoot viral

தெலுங்கு மற்றும் தமிழ் திரைபடங்களில் நடித்து வருபவர் மீனாட்சி சவுத்ரி. இவர் "பெமினா மிஸ் இந்தியா 2018" போட்டியில் கலந்து கொண்டு, "மிஸ். கிராண்ட் இந்தியா"வாக முடி சூடப்பட்டார். மேலும் "மிஸ். கிராண்ட் இன்டர்நேஷனல்" போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

Thalapthy

இதையடுத்து இவர் தெலுங்கில் 2021ம் ஆண்டு வெளியான "இசட வாகனமுலு நிலுபரடு" என்ற படத்தில் அறிமுகமானார். மேலும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாநில அளவிலான நீச்சல் வீராங்கனையாகவும், பேட்மிண்டன் வீராங்கனையாகவும் உள்ளார். 

மேலும் இவர், மாடலிங் துறையிலும் பணியாற்றியுள்ளார். இதையடுத்து தமிழில் விஜய் ஆண்டனி நடித்த "கொலை" திரைப்படத்தில் நடித்திருந்தார் மீனாட்சி சவுத்ரி. இந்நிலையில் தற்போது "தளபதி 68" படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Thalapthy

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளை உடையில் தேவதை போல் இவர் நடத்திய போட்டோஷூட் தற்போது வைரலாகியுள்ளது.