விஜய் படம் எங்கெல்லாம் ஓடுது பாருங்க! வீடியோ எடுத்து வெளியிட்ட தமிழ் பிரபலம்!

விஜய் படம் எங்கெல்லாம் ஓடுது பாருங்க! வீடியோ எடுத்து வெளியிட்ட தமிழ் பிரபலம்!


vijay-mersal-movie-in-flight

தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சர்க்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெறி, மெர்சல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகின.

vijay

இந்நிலையில் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ள விஷயம் நாம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். சாதாரண மக்களையும் தாண்டி பிரபலங்களாக இருக்கும் மனிதர்கள் கூட விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அதில் ஒருவர்தான் இயக்குனர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு.

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சமீபத்தில் விமானத்தில் செல்லும்போது மெர்சல் படத்தை விமானத்தில் ஒளிபரப்பியுள்ளனர்.

அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டு விஜய் ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.