சினிமா

1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? அடேங்கப்பா..

Summary:

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பல்வேறு பிரபலங்களின் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கல் அன்று வெளியானது மாஸ்டர் திரைப்படம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதேமே வெளியாகவேண்டி இருந்த மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் தாமதம் ஆனது.

இந்நிலையில் தற்போது அரசு வழங்கியுள்ள ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, 50% இருக்கைகளுக்கான அனுமதியுடன் வெளியான மாஸ்டர் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ஆம், படம் வெளியாகி 10 நாட்களில் மாஸ்டர் படம் இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் இந்த வெற்றியை #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பட்டியலில் மாஸ்டர் படமும் இணைந்துள்ளது.


Advertisement