அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி, இடம் குறித்த தகவல்.!
விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 5ம் தேதி, மலேசியாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.