மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை! தொடரும் பிகில் சர்ச்சைகள்!

Vijay IT ride


Vijay IT ride

அட்லீ  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளிவந்தது. மேலும் 170 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரித்த இப்படம் எதிர்பார்த்ததை விட பெருமளவில் வசூல் சாதனை செய்தது. 

இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் வரவு-செலவில் வரிஏய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலின்படி வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் இறங்கினர். அதன்படி பிகில் படத்தில் தொடர்புடைய ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் கல்பாத்தி அகோரம் குடும்பத்தாரின் வீடுகள்,  நடிகர் விஜய்யின் வீடு,  பைனான்சியர் அன்புசெழியனின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றை வருமானவரித் துறை அதிகாரிகளால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Bigil

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள விஜயின் பனையூர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர் வருமான வரி அதிகாரிகள். மேலும் இச்சோதனை ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.