சினிமா

சிறுவயதில் பெண் வேடமணிந்த தளபதி விஜய்! எவ்ளோ கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா! வைரலாகும் அரிய புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக பட்டையை கிளப்பி வருபவர் நடிக

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடுவர்.

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு  ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தளபதி விஜயின் அரிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் தற்போது அவர் சிறுவயதில் பெண் வேடமணிந்த புகைப்படம் ஒன்று வைரலாகிறது. விஜய் பிரியமானவளே திரைப்படத்தில் பெண் வேடமணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். பின்னர் வேட்டைக்காரன் திரைப்படத்திலும் ஒரு பாடலுக்காக பெண் வேடமிட்டு இருந்தார்.


Advertisement