பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸாக விஜய் செய்த காரியத்தை பார்த்தீங்களா.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸாக விஜய் செய்த காரியத்தை பார்த்தீங்களா.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!


vijay-give-surprise-to-thalapathi-63-actress

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விஜய் 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இதன் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

vijay

இந்நிலையில் விஜய் பயிற்சி கொடுக்கும் கால்பந்து அணியில் நடிகை அம்ரிதா ஐயரும் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்ரிதாவிற்கு பிறந்த நாள் வந்துள்ளது,

இந்நிலையில் இதனை அறிந்த நடிகர் விஜய் அவருக்கு தெரியாமல் சர்ப்ரைசாக கேக் ஒன்றை ஆர்டர் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் ஷூட்டிங் முடிந்த நிலையில் அங்கேயே கேக் வெட்டி மிகவும் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.  இதனால் அம்ரிதா மிகவும் உற்சாகத்தில் உள்ளார்.