பீஸ்ட் படத்தால் அப்செட்டில் இருக்கும் பூஜா ஹெக்டே... விஜய் கொடுத்த வாக்கு...Vijay give chance to Pooja for his next movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் அனிருத் இசையமைத்த, சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதிய அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த பாடலில் விஜய்க்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். 

vijay

பூஜாவிற்கு அந்த அளவிற்கு பெர்ஃபாமன்ஸ் கிடையாதாம். இதனால் மிகுந்த விரக்தியில் இருப்பதாக விஜய்யிடம் பூஜா கூறியுள்ளார். அதனையடுத்து விஜய் தனது அடுத்த படத்தில் பூஜாவிற்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளாராம். 

ஏற்கனவே விஜயின் 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவிற்கும் விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளதால் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.