அடக்கடவுளே.. வீட்டுக்கு முன்னாடி நின்று விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

அடக்கடவுளே.. வீட்டுக்கு முன்னாடி நின்று விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!


vijay fans standing infront of vijay house

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும்  ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது படம் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

vijay fans

மேலும் விஜய் 63 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் எனவும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில ரசிகர்கள் விஜய்யை கடவுளென எண்ணி அவரை பார்க்க வீட்டின் முன்பு காத்து கிடப்பதுண்டு.  அப்படி இரண்டு விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய் வீட்டின் முன்பு நின்று கோவிலில் வழிபடுவது போல கும்பிட்டுள்ளனர்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.