தற்போதைய விஜய் ரசிகர்களின் நிலைமை இதுதான்.! பிரபல இயக்குனர் செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் பதிவு!!vijay-fans-situation-famous-director-tweet

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி இறைத்தது.

இந்த நிலையில் அவர் மீண்டும் விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதுகுறித்து எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதற்கிடையில் லோகேஷ் பாலிவுட் படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் தளபதி 67 பட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் சார்பாக பிரபல இயக்குனர் மீம் ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான குளுகுளு பட பாடலை இயக்குனர் லோகேஷ் ட்வீட் செய்துள்ளார். அதற்கு இயக்குனர் ரத்னகுமார், சிங்கம் படத்தில் வரும் வில்லன் டேனியின் புகைப்படம் கொண்ட மீமை பகிர்ந்து தற்போது விஜய் ரசிகர்களின் நிலை இதுதான் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.