சினிமா

என்னது.. தல தோனி பிரதமர், தளபதி விஜய் முதலமைச்சரா.? விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா.!!

Summary:

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அந்த ஸ்டுடியோவில் தல தோனி மற்றும் தளபதி விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். 

கொரோனோவால் நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணி மோதுகிறது. இதற்கிடையில் இதன் பயிற்சிக்காகவும், விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகவும் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை வந்துள்ளார்.

தோனியின் விளம்பர சூட்டிங்கும் கோகுலம் ஸ்டுடியோவிலேயே நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தான் தல தோனி மற்றும் தளபதி விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள், ஆளப்போகும் மன்னர்களே என்ற தலைப்பில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் தோனி பிரதமர் என்றும், விஜய் முதலமைச்சர் என்றும் குறிப்பிட்டு ஆளப்போகும் மன்னர்களே என போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement