சினிமா

அஜித் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கலாய்த்து எடுக்கும் விஜய் ரசிகர்கள்- என்ன வார்த்தை தெரியுமா?

Summary:

vijay fans kallai about ajith

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தின் ஒரு இடத்தில் தல அஜித் அவர்கள் பெண்கள் நோ சொன்னால் அவர்களை தொடக்கூடாது, அது மனைவியாக இருந்தாலும் என்று கூறியிருப்பார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் அஜித் ஹீரோயினை  கற்பழிப்பது போன்ற காட்சி வருகிறது என கூறி இணையத்தில் விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Advertisement