பிரச்சனைக்கு நடுவே விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான செயல்! குவியும் பாராட்டு!

பிரச்சனைக்கு நடுவே விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான செயல்! குவியும் பாராட்டு!


Vijay fans gave Nilavembu kashayam at cinema theater

சர்க்கார். இன்று தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கேட்கும் வார்த்தை சர்க்கார். தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படத்தின் போஸ்டர் வெளியானதுமுதல் இன்றுவரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது சர்க்கார் திரைப்படம்.

Sarkar

படம் முழுவதும் அரசியல் என்பதாலும், ஆளும் கட்சிக்கு எதிரான காட்சிகள் அதிகம் இருந்ததாலும் படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. சென்னை காசி தியேட்டர் உள்ளே நுழைந்த சிலபேர் அங்கிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்தனர். இதனால் சர்ச்சைக்குரிய ஒருசில காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்நிலையில் சர்க்காருக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் பலரும் வீடியோவாகவும், மீம்ஸ்களாகவும் வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதையும் தாண்டி பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுத்து உதவி செய்துள்ளனர் தளபதி ரசிகர்கள். நெல்லை மாவட்ட தலைமை விஜய் தொண்டரணி சார்பாக, திருநெல்வேலியில் உள்ள ராம் மதுரம் திரையரங்கில் ‘சர்கார்’ திரைப்படத்தை பார்க்க வந்த 500 மேற்பட்ட ரசிங்கர்களுக்கு, விஜய் ரசிகர்கள் சார்பாக டெங்கு ஒழிப்பிற்காக நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ராம் மதுரம் சினிமாஸ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை கண்ட விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.