சினிமா

விஜய் கொள்கையை பின்பற்றும் ரசிகர்கள்! சத்தியசோதனையாக அமைந்த விஷயம்.

Summary:

Vijay fans bigil

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரயுள்ளது. விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்பு வெளியான சர்கார் படத்தில் விஜய் அவர்கள் இலவசம் குறித்து கூறியிருந்தார். உடனே தளபதி ரசிகர்கள் வீட்டில் உள்ள இலவசத்தை உடைத்தனர்.

ஆனால் தற்போது சில நிறுவனங்கள் 1500 மேல் ஆடை வாங்கினால் பிகில் டிக்கெட் இலவசம். 2000 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால் பிகில் டிக்கெட் இலவசம் என்றெல்லாம் இலவசமாக பிகில் டிக்கெட்டை வழங்கி வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Advertisement