சினிமா

தளபதி விஜயின் பிகில் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து!

Summary:

vijay fan talk about bikil


தொடர்ந்து 3வது முறையாக நடிகர் விஜய்யை  வைத்து பிகில் என்ற படத்தை இயக்கியுள்ளார் அட்லி. இந்தப்படத்தை ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதுடன் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் ரத்து என கூறப்பட்டு வந்தநிலையில், பிகில் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

இந்தநிலையில் இன்று அதிகாலை முதலே திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். விஜய்யின் பிகில். ரசிகர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு ஒரு பேனர்கள் கூட இல்லாமல் பிகில் வெளியீடு கொண்டாடப்பட்டது.

பிகில் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் விஜய் ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை படம் மிகச்சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement