மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா.! இந்திக்கு எதிராக பொங்கி எழுந்த விஜய்! இணையத்தில் செம வைரல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். படத்தில் ஒரு காட்சியில் 'உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா, எல்லா தடவையும் இந்தியை ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது’ என்ற டயலாக்கை விஜய் பேசியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.