விஜய் தேவர்கொண்டாவுக்கு விரைவில் திருமணம்? அவரே கொடுத்த விளக்கம்!Vijay Devarkonda explain about marriage

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. இவரும், பிரபல நடிகை ராஸ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்த போவதாகவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Vijay devarkonda

ஆனால் இவர்கள் இருவருமே அதை மறுத்து தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தாலும் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே நடிகர் விஜய் தேவர்கொண்டா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அதற்குக் காரணம் அவர் வெளியிட்ட பதிவில் இரண்டு கைகள் ஒன்றி மேல் ஒன்று இருக்க நிறைய நடக்கின்றன. ஆனால் இது ஸ்பெஷலானது. விரைவில் அறிவிக்கிறேன் என தெரிவித்திருந்தார். எனவே எனவே ரசிகர்கள் பலரும் இந்த பதிவை இவருக்கு விரைவில் திருமணமாக போவதாக நினைத்தனர்.

Vijay devarkonda

இதனையடுத்து விஜய் தேவர்கொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய் தேவர்கொண்டா ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறையாவது எனக்கு திருமணம் செய்து வைக்க மீடியாக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். எனக்கு இப்போதைக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ இல்லை என கூறியுள்ளார்.