வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
விஜய் தேவர் கொண்ட சமந்தா காதலா.. இணையத்தில் லீக் ஆன வீடியோவால் பரபரப்பு.?
தென்னிந்திய சினிமா துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'சாகுந்தலம்' திரைப்படம் படுதோல்வியை அடைந்தது. இதனையடுத்து தற்போது தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் தருவாயில் திரையரங்கில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது. 'குஷி' படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
இது போன்ற நிலையில் 'குஷி' படத்தின் படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் விஜய தேவர் கொண்ட இருவரும் இணைந்து எடுத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் விஜய் தேவர் கொண்டா, சமந்தாவிற்கு தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொள்ளும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இணையத்தில் இந்த வீடியோ பரவி விஜய் தேவர் கொண்ட சமந்தா இருவரும் காதலித்து வருகிறார்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.