நயன்தாராவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் பிரபல இளம்நடிகர்.! யார் தெரியுமா?

நயன்தாராவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் பிரபல இளம்நடிகர்.! யார் தெரியுமா?


vijay devarakonda join with nayanthara in new movie

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை கடந்து அவர் சந்திரமுகி,கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, ராஜா ராணி, எதிர்நீச்சல், தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாயா, வேலைக்காரன் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

     nayanthara

மேலும் கதாநாயகியை கொண்டு உருவாக்கப்பட்ட அறம், டோரா, கோலமாவு கோகிலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் அஜித்துடன் அவர் நடித்து வெளிவந்த விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நயன்தாரா தற்போது விஜய் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.அதைத் தொடர்ந்து அவர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

nayanthara

மேலும் அப்படத்தில் அவர் தமிழில் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமான தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.