தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இப்படி சிக்கிட்டாரே.. பொது இடத்துல., காருல கசமுசா செய்வாரா?.! விஜய் தேவரகொண்டாவின் பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்..!!
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகள் குறித்த ப்ரோமோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், சார்லி தயாரிப்பில் "லைகர்" என்ற படத்தில் குத்து சண்டை வீரராக நடித்துள்ளார், இந்த படம் வரும் ஆகஸ்ட் 27 அன்று திரையரங்குகளில் வருவதற்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் "காஃபி வித் கரண்" என்ற நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் பங்கேற்றனர். விஜய் தேவரகொண்டாவின் பர்சனல் லைப் குறித்த கேள்விகளை கேட்டு சர்ச்சையை கிளப்புவது வழக்கமான ஒன்றாகும். இங்கேயும் அதுதான் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் "காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் இவர் பேசிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கரண், விஜய் தேவரகொண்டாவிடம் 'கடைசியாக நீங்கள் எப்போது உடலுறவு கொண்டீர்கள்?' என்று கேட்டதற்கு, விஜய் தேவரகொண்டா நகைச்சுவையான சிரிப்புடன் 'இந்த கேள்வி இப்போது வேண்டாமே' என்று பதில் அளித்துள்ளார்.
இதன் பின்னும் விடாமல் கரண், ஒரு பொது இடத்தில் உடலுறவு கொள்வது பற்றி கேட்டபோது, அதற்கு 'காரில்' என்று விஜய் தேவரகொண்டா பதில் அளித்துள்ளார். இந்த பதிலானது கரண் மட்டுமல்லாமல் அனன்யாவையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.
இதோடு நிறுத்திக்கொள்ளாமல் மீண்டும் அது குறித்த கேள்விகள் பற்றி கேட்ட கரண், "மூவருடன் உடலுறவு செய்ததுண்டா?" என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் 'இல்லை' என்று கூறியுள்ளார். இவர் பேசிய இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.